Subscribe Us

header ads

இந்தியாவுக்கான ON ARRIVAL விசா வின்னபிக்கனுமா? இத படிங்கள்...


கடந்த மாதம் இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் அறிவித்ததற்கிணங்க இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வோருக்கான விசா முறைமையுள்ள 44வது நாடாக இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஏப்ரல் 14ம் திகதி முதல் தற்போது உலகெங்கும் நடைமுறையில் இருக்கும் என்றழைக்கப்படும் ETA இலத்திரனியல் பயண அனுமதி முறைமை ஊடாக இவ்விசா வழங்கப்படுகிறது.
இதனடிப்படையில் சாதாரண இலங்கைக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். எனினும் இதற்கான அனுமதி பெறப்படாமல் நேரடியாக விமான நிலையத்தில் விசா வழங்கப்படாது என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க இந்திய பயணத்துக்கு முன்பதாக குறித்த இலத்திரனியல் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான இணைய இணைப்பு :

குறித்த விண்ணப்பத்தின் போது கடவுச்சீட்டின் பிரதி மற்றும் விண்ணப்பதாரியின் நிழற்படமும் தரவேற்றப்பட வேண்டும் என்பதால் அதற்குரிய ஆவணங்களையும் (தெளிவான பிரதிகள்) தயார் செய்து கொண்டே விண்ணப்பிக்க வேண்டும். தெளிவான ஆவணங்கள் கிடைக்கப் பெறாதவிடத்து அனுமதி மறுக்கப்படும் எனவும் அவ்வாறு மறுக்கப்படின் சாதாரணமாக தூதரகத்தில் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விண்ணபத்துக்கான கட்டணத்தையும் இணையம் மூலமாகவே செலுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. குறித்த சேவைகளுக்கான இணைய முன்பக்கம்:  
மேலதிக உதவிகளுக்கான தொடர்பு : +91-11-24300666 அல்லது  indiatvoa@gov.in என்ற மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஆவணத் தரவேற்றத்தின் போது அதற்கான அளவு வரையறைகளும் தரப்பட்டிருப்பதை கவனத்திற்கொள்ளவும்.

Post a Comment

0 Comments