புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் மாபெரும் சாதனையொன்றை இன்று 2015-04-15 அன்று நிகழ்த்தியது. அதேநேரம் பாத்திமாவின் சாதனை அதிபரின் பிரியாவிடை நிகழ்வும் நடைபெற்றது.
பழைய மாணவிகள் சங்கத்தின் அயராத உழைப்பின் பயனாகவும், கூட்டு முயற்சியின் வெற்றியாகவும் பாடசாலைக்கான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு நேற்று திறக்கப்பட்ட அதேநேரம் பாத்திமாவின் அதிபராக கடந்த பத்து வருடங்களாக சேவை புரிந்து அதிபர் திருமதி சுமையா ரிஸ்வான் அவர்களின் பிரியாவிடை நிகழ்வும் நடைபெற்றது.
நேற்று பிற்பகல் 4 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இரு பிரதான நிகழ்வுகளுக்கு பழைய மாணவிகள் பலர் சமுகமளித்திருந்தனர்.
இந்நிகழ்வில் பாத்திமாவின் அதிபர் திருமதி சுமையா ரிஸ்வான் கடந்து வந்த பாதை மற்றும் பழைய மாணவிகள் செய்துள்ள திட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டன.
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பழைய மாணவிகளின் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.
தங்கள் அகமறவா அதிபருக்கு நினைவுச் சின்னங்னளும் அன்பளிப்புக்களும் வழங்கி கௌரவித்தமை இன்னொரு சிறப்பம்பமாகும்.
நன்றி: Puttalam Online

0 Comments