முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை நேற்று சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மையில் எத்தனை பேர் என்பது குறித்து பல்வேறு ஊடகங்களும் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளமை பொதுமக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலத்திரனியல் ஊடகங்கள் நேற்றிரவு செய்தியில் 58 பா.உ. கள் என தெரிவித்திருந்தன. அரச தமிழ் ஊடகமொன்று இன்று 62 பேர் எனவும், சிங்கள ஊடகமொன்று 60 பேர் எனவும், மற்றுமொரு சிங்கள ஊடகம் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவை ஆதாரம் காட்டி 57 பேர் எனவும் குறிப்பிட்டுள்ளன. அரச சிங்கள ஊடகம் இது குறித்து வெளிப்படையாக எதனையும் கூறிப்பிடவில்லை.
இவற்றில், அரச தமிழ் ஊடகமொன்றே கூடுதலான எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments