Subscribe Us

header ads

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் அது முஸ்லிம்களுக்கு ஆபத்தாக மாறிவிடும்:முஜிபுர் ரஹ்மான்


மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் அது முஸ்லிம்களுக்கு ஆபத்தாக மாறிவிடும் என மேல்மாகாண சபை உறுப்பனரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மருதானையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுத் தேர்தலொன்று விரைவில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. இனவாதம் பேசி அரசியல் செய்த காலம் இப்போது முடிவடைந்து வருகின்றது. இந்நிலையில் மீண்டும் இனவாதத்தை கிளப்பி அதனூடாக அரசியல் செய்வதற்கு ஒருசாரார் முயற்சிக்கின்றனர்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இதற்கு தலைமை வகிக்கப்போகிறார் என முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு மஹிந்த தலைமையிலான அணியினர் வலுபெற்றால் முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் ஆபத்தாக அமைந்துவிடும். எனவே ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களையும் உறுதிப்படுத்துவதனூடாக எமக்கு வரும் ஆபத்துகளிலிருந்து ஓரளவு பாதுகாக்பை பெறலாம் எனவும் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments