முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்ச தனக்கு மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் பாரியளவு ஊழல் மோசடிகள் அவர் மீது சுமத்தப்பட்டது. திவிநெகும திட்டத்தில் 6500 மில்லியன் ரூபாவினை தேர்தல் செலவுக்காக பயன்படுத்தியதாக இவருக்கு எதிராக நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் இவருக்கு எதிராக கடுவெல நீதிமன்றம் பிடியானை பிறப்பித்திருந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததை தொடர்ந்து இவர் அமெரிக்காவிற்கு தப்பி ஓடினார். இந் நிலையில் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் நாட்டுக்கு திரும்புகின்றார்.
நாட்டுக்கு திரும்பும் பசில் ராஜபக்ச தனக்கு மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்தார்.


0 Comments