தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன
தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூல ஆவணத்தை அவசர பத்திரமாக பிரதமர் முன்வைத்ததாக அவர் கூறினார்.
அதன்படி விரைவில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அமைச்சரவை தீர்மானங்கள் - 23-04-2015
தகவல் அறிந்துகொள்ளும் உரிமைதொடர்பானசட்டமூலம் (விடய இல. 25)
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தகவல் அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பான சட்டமூலம் ஒன்றினை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தீர்மானித்தது. குறித்தசட்ட மூலம் அரசியல் யாப்பின் 122 ஆம் பிரிவின் கீழ் அவசர சட்டமூலமாக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூலம் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு சட்ட மூலம் (விடய இல. 26)
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கணக்காய்வு சட்ட மூலமொன்றை பாராளுமன்றில் முன்வைப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதன்படி அரச நிதி முகாமைத்துவம் தொடர்பாக அரசியல் யாப்பின் மூலம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தினை பலன் உள்ளதாக மாற்றிக் கொள்ளும் நோக்கில் புதிய யாப்புதிருத்தம் ஒன்றினை ஏற்படுத்தும் பொருட்டு மேற்கூறப்பட்ட சட்டமூலத்தை அரசியல் யாப்பின் 122 ஆம் பிரிவின் கீழ் அவசரசட்ட மூலமாக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூலம் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்காலதேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக முன்வைக்கப்படஉள்ளஅரசியல் யாப்புதிருத்தம் (விடய இல. 38)
கலப்பு தேர்தல் முறையொன்று தொடர்பான நகல் சட்ட மூலம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகளை பெற்று புதிய யாப்புதிருத்தம் ஒன்றினை முன்வைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

0 Comments