நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலை
வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.
பசில் ராஜபக்ச சிறைச்சாலை அதிகாரிகளிடம் விடுத்த
கோரிக்கைக்கு இணங்க அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலை கட்டணம் செலுத்தும்
பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவரை உடல் பரிசோதனை செய்வதற்காகவே கொழும்பு தேசிய வைத்தியசாலையின்
வைத்திய நிபுணர் ஒருவரிடம் பரிசோதனைக்கு அனுப்பியதாக கொழும்பு பிரதான சட்ட
வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.


0 Comments