இந்திய உளவுப் பிரிவினருக்கு முன்பதாகவே இலங்கையில் ''ஜிகாத்'' முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்குவதாக எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இன்றையஆட் சியாளர்களும் கண்களை மூடிக்கொண்டே உள்ளனர் என குற்றம் சாட்டும் பொது பலசேனா. இனிமேலாவது ''ஜிகாத்''தை தடைசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென் றும் அவ்வமைப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக பொது பல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்குள் மெதுவாக ஊடுருவிய முஸ் லிம் ''ஜிகாத்'' தீவிரவாதம் இன்று நாடு முழுவதும் வியாபித்து விட்டது. இன்று அவ்வியக்கம் இந்தியாவை அழிப்பதற்கும் தாக்குதல்களை நடத்தவும் திட்ட ங்களை தீட்டி வருவதாகவும் இங்கு அவ்வியக்கத்தின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகவும் இந்திய உளவுப் பிரிவினர் எமது நாட்டுக்கு அறிவித்துள்ளனர்.
இவ் அறிவிப்பை மதிக்காமல் இருக்கலாகாது. எனவே, அரசாங்கமும் எமது உளவுப் பிரிவினரும் உஷாராக வேண்டும். ஜிகாத் தீவிரவாத அமைப்பை இங்கு தடை செய்ய வேண்டுமென்றும் டிலந்த விதா னகே தெரிவித்தார்.


0 Comments