Subscribe Us

header ads

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 20 தொழிலாளர்கள் பலி : திருப்பதியில் சம்பவம்


திருப்பதி -  சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் கும்பல் மீது பொலிஸார்  நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில்  20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச்சூட்டில் தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 9 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த வனப்பகுதியில் 150இற்கும் மேற்பட்டவர்கள் மரங்களை வெட்டிக்கொண்டிருப்பதாக  ஆந்திர பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் அவர்களைப் பிடிப்பதற்காக அங்கு சென்றபோது, தொழிலாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 2 காவல்துறையினர் காயமடைந்ததாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தொழிலாளர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு  நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments