சம்மாந்துறை பள்ளி வாயல் தலைமை எவ்வாறான வேட்பாளரை தேர்தலில் களமிறக்க
வேண்டும்..??
சம்மாந்துறை மக்கள் பல வருட காலமாக தக்க வைத்து வந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை
கடந்த ஒரு தசாப்த காலமாக இழந்து தவிக்கின்றனர்.உண்மையில் பாரிய வாக்கு வங்கியைக்
கொண்ட இவ் ஊரானது பிரதிநிதித்துவத்தினை இழப்பது பலரது எள்ளி நகையாடலுக்கு காரணமாக
அமைவதுடன் அபிவிருத்திப் பணிகளிலும் புறக்கணிப்புக்களுக்கு உள்ளாகின்றது என்பதை
மறுக்க முடியாது.இம்முறையும் சம்மாந்துறை அரசியல் வாதிகளிடையே ஏற்பட்டுள்ள பதவி
மோகத்தால் இழக்கப்பட்டு விடுமா..?? என்ற வினா அடையாளத்துடனே உள்ளது.
இதன் காரணமாக சம்மாந்துறை பள்ளி வாயல் தலைமைகள் சம்மாந்துறை
பிரதிநிதித்துவத்தினை உறுதிப் படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றன.பள்ளிவாயல்
தலைகளின் அண்மைக் காலச் செயற்பாடு ஒரு பிரதிநிதித்துவத்தினை பெறுவதில் கரிசனை
கொள்கின்றதே தவிர அவ் வேட்பாளர் தகமை பற்றி கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.ஒரு
முஸ்லிம் சமூகத்தினை ஒரு விடயத்தில் தலைமை தாங்கி வழிகாட்டக் கூடியவர் இஸ்லாமிய
விழுமியங்கள் நிறையப் பெற்றவராக இருக்க வேண்டும்.இஸ்லாம் அரசியலினையும் எமக்குக்
கற்றுத் தந்துள்ளது.நபியவர்களிற்கு அடுத்து ஆன்மிகம் கலந்த அரசியலினை செய்து
காட்டி இன்றும் கலீபா உமர் (ரலி) அவர்கள் இன வேறுபாடுகளிற்கு போற்றப்படுகிறார்.
எனவே,சம்மாந்துறை பள்ளி வாயலானது இன்று தங்களது ஊர்ப்
பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாக்க ஒரு வேட்பாளரினை களமிறக்கும் திட்டத்தில்
இருப்பின் இஸ்லாமிய விழுமியங்கள் நிறையப் பெற்றவரினை மக்கள் முன் வெளிக் கொணர
வேண்டும்.எங்கே? சிறந்த அரசியல் வாதிகள் எனக் காத்து நிற்கும் மக்களுக்கு
சம்மாந்துறை பள்ளி வாயல்களின் செயற்பாடு ஒரு முன்ணுதாரமாக அமைய வேண்டும்.இன்று
இருக்கும் அரசியல் வாதிகள் அதற்கு தகமை உள்ளவர்களா என முதற் கண் பரிசீலிப்பதோடு
அவர்கள் தகுதி அற்றவர்கள் என இனங்காணப்படும் சர்ந்தப்பத்தில் இஸ்லாமிய
விழுமியங்கள் நிறைந்த ஒரு அரசியற் தலைமையினை சம்மாந்துறை மக்களிடம் கொண்டு வந்து
உருவாக்க முயற்சிக்க வேண்டும்.அல்லாது போனால் வாய் மூடி மௌனம் காப்பது சிறப்பாக அமையும்.அதை
விட்டு விட்டு வெறும் அரசியல் தலைமையினை உருவாக்க பள்ளி வாயல்களே முன்னிற்பது
அல்லாஹ்வின் கோபப் பார்வை சமூகத்தில் வரக் காரணமாகிவிடும்.
இவ் ஆக்கத்தின் நோக்கம்:
1.இஸ்லாமிய விழுமியங்கள் நிறைந்த ஒரு அரசியற் தலைமை உருவாக்க
வேண்டும்.
2.சம்மாந்துறை பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தலில் சம்மாந்துறை
பள்ளிவாயல் தலைமைகளின் செயற்பாடுகள் குறைந்து காணப்படும் இச் சர்தர்ப்பத்தில்
மீண்டும் இக் கருத்தினை வலுக்கச் செய்தல்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


0 Comments