கற்பிட்டிப் பிரதேச சபை எல்லை நிர்ணயம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்...!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹகீம், சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி, போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம். ஹரீஸ், கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூர் உட்பட அரசியல்,சமூக பிரமுகர்கள் ஆகியோர் பொது நிர்வாக அமைச்சர் கரு ஜயசூரிய அவர்களுடன் உள்ளூராட்சி சபைகள் எல்லைகள் தொடர்பாக சந்திப்பொன்றை பொது நிர்வாக அமைச்சில் இன்று (23.4.2015) நடத்தினர்.
இதன் போது நிகழ்ச்சி நிரலின் படி 73 கிலோ மீற்றர் நீளம் விசாலமுடைய கற்பிட்டிப் பிரதேச சபைப் பிரிவில் வசிக்கும் சுமார் 118,200 மக்கள் தொகை, 62,000 வாக்காளர்கள் உட்பட முக்கிய அம்சங்களைக் கருத்திற் கொண்டு தற்போது புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள வட்டார எல்லைகளின் பிரகாரம் ஒதுக்கப்பட்டுள்ள 19 உறுப்பினர்கள் குறைந்த பட்சம் 23 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கரு ஜெயசூரியவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதுடன், எல்லை நிர்ணயம் தொடர்பில் இடம் பெற்றுள்ள பாரபட்சங்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கும் படியும் வலியுறுத்தப்பட்டது.







0 Comments