Subscribe Us

header ads

மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் நீர்கொழும்பில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.(படங்கள் இணைப்பு)

-எம்.இஸட். ஷாஜஹான் 


கடந்த அரசாங்கத்தினால் மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில், புதிய அரசாங்கம் மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் நீர்கொழும்பு மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை (6) காலை ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்டனர். 

நீர்கொழும்பு, கொத்தலாவலை பாலத்தின் கீழ் மீன்பிடிப்படகுகளை நிறுத்தி வைத்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது அவர்கள் கோஷங்களை எழுப்பியதுடன், சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர். பிற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் இரண்டு வகையான மீன்கள்,  நீர்கொழும்பில் கருவாட்டுத் தொழிலில் ஈடுபடுவோருக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிராகவும் தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை பயன்படுத்துவதற்கு எதிராகவும் இந்திய றோலர் படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தலில் ஈடுபடுவதற்கு எதிராகவும் கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் துறைமுக நகர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கம்மல்துறை, பலகத்துறை, ஏத்துக்கால, கடற்கரைத்தெரு, குடாபாடு, பிட்டிபனை, தூவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் ஐக்கிய மீனவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 




Post a Comment

0 Comments