ரூஸி சனூன் புத்தளம்
கல்பிட்டி பிரதேச சபை எல்லைக்குள் அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான அரச காணிகள் கடந்த ஆட்சி காலத்தில் அரசு செல்வாக்கினை பயன்படுத்தி சில அரசியல்வாதிகள் வெளிநாட்டு காரர்களுக்கும், ஹோட்டல் காரர்களுக்கும் திருட்டு உறுதிகளை வைத்து விற்கப்பட்டுள்ள விடயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எஸ்.எச்.எம். நியாஸ் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இந்த காணிகளை மீண்டும் அரச பொது சொத்துகளின் கீழ், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உள்ளோம். இந்த காணிகளை திருட்டுத்தனமாக பெற்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும், அரச உயர் மட்டத்துக்கு கொண்டு செல்லவும் உள்ளோம்.
எனவே ஏத்தாளை, நுரைச்சோலை, கண்டக்குளி போன்ற பெருங்கடலை அண்டிய பிரதேசங்களில் இவ்வாறு காணிகளை பெற்ற வெளி பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தனியார் கம்பனிகள் காணிகளை பெற்றவர்களிடம் அவைகளை மீள ஒப்படைத்து பணத்தை மீள பெற வேண்டும். தவறுமிடத்து காணியும், பணமும் இல்லாத நிலை ஏற்படலாம் என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.


0 Comments