-எம். எஸ். முஸப்பிர்
தேசிய வேகன்கள் சங்கத்தினர் மாட்டு வண்டிகளில் வென்னப்புவவிலிருந்து கல்பிட்டி தலவில சூசையப்பர் தேவாலயத்துக்குச் செல்லும் பயணம் வென்னப்புவ நகரிலிருந்து இன்று திங்கட்கிழமை பகல் ஆரம்பிக்கப்பட்டது.
வருடாந்தம் நடைபெறும் இந்த பயணத்தில் மாட்டு வண்டிகள் பங்கு கொண்டுள்ளன.
இந்தப் பயணமானது வென்னப்புவவிலிருந்து சுமார் நூறு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள தலவில தேவாலயத்துக்கு சென்று அங்கு ஒரு வாரம் காலம் தரித்திருந்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மீண்டும் அங்கிருந்து தமது வீடுகளுக்குத் திரும்பி வர ஏற்பாடு செய்துள்ளதாக, இந்தக் குழுவின் தலைவர் டப்ளிவ் . பி. காமினி பெர்னாண்டோ தெரிவித்தார்.
கடந்த இரு வருடங்களாக மாட்டு வண்டிகளில் தலவில தேவாலயத்துக்குப் பயணித்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், ஒரு தடவை மன்னார் மடு தேவாலயத்துக்கும் மாட்டு வண்டிகளில் சென்று வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.




0 Comments