பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் யார் என சபாநாயகர் இன்று அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. இதன்போது, எதிர்க் கட்சித் தலைவர் யார் என இன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவிப்பதற்கான இடம்பாடுகள் இருப்பதாக பிரதிச் சபாநாயகர் சந்திம வீரக்கொடி இன்று காலை தனியார் வானொலி சேவையொன்றிடம் தெரிவித்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய எதிர்க் கட்சித் தலைவர் ஒருரை நியமிக்குமாறு கோரிக்கைகள் எழுந்ததனாலேயே எதிர்க் கட்சித் தலைவர் குறித்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டதனால், எதிர்க் கட்சித் தலைவர் குறித்த கருத்துக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments