Subscribe Us

header ads

நாடாளுமன்ற நாளைய அமர்வில் பங்கேற்கும் பசில் ராஜபக்ச


இலங்கை திரும்பவுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாளைய தினம் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள பசில் ராஜபக்ச தான் அரசியல் தீர்மானங்களை எடுத்த போதிலும் நிதி மோசடிகளில் ஈடுபடவில்லை என கூறியுள்ளார்.
இலங்கை திரும்புவதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் பசில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி தனது சகோதரரான மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, பசில் ராஜபக்ச உடனடியாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றதுடன், சில வாரங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

Post a Comment

0 Comments