நேற்று பதுளை கொஸ்லாந்த பிரதேசத்தில் உள்ள தியலும நீர்
வீழ்ச்சியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் சடலங்கள்
மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தற்கொலை செய்த சம்பவம் வீடியோ ஒன்றில்
பதிவாகியுள்ளது.
யுவதியின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதுடன், இளைஞனின் சடலம் இன்றைய
தினம் மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் நீர்வீழ்ச்சியில் பாய்ந்து தற்கொலை செய்து
கொண்டுள்ளதுடன், உயிரிழந்தவர்கள் காதல் ஜோடியென அப்பகுதி மக்கள்
தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் இருவரும் தியலும – நிகபொத பிரதேசத்தை வசிப்பிடமாகக்
கொண்டர்வர்கள் எனவும், 17 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும் தற்கொலை செய்ய முன்னர் உறவினர் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்பு
கொண்ட இவர்கள் அது பற்றி கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் 17 வயதுடைய சரவணா யோகராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கொஸ்லந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கீழுள்ள வீடியோவில் தற்கொலை செய்ய குதிக்கும் ஜோடி நீர்வீழ்ச்சியில் வந்து விழுவதை காணலாம் .






0 Comments