கடந்த அரசாங்கத்தில் பௌத்த விவகார ஜனாதிபதி இணைப்புச் செயலாளராக பதவிவகித்த வடிநாபஹ சோமானந்த தேரர் இன்று நிதி மோஷடிதொடர்பான பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு வாக்குப் பதிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த தேரர் கடந்த அரசாங்க காலத்தில் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்குரிய 600 மில்லியன் ரூபா நிதியை பௌத்தர்களுக்குரிய சில் ஆடை பெற்றுக்கொடுக்க பயன்படுத்தியுள்ளார் என்ற குற்றச் சாட்டின் பேரில் இவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளவே இவர் இன்று அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.


0 Comments