Subscribe Us

header ads

புதிய தேர்தல் முறையும் புத்தளம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும்..........


கௌரவ ரவுப் ஹகீம் எம்.பி
நகர அபிவிருத்தி, நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் 
தலைவர் 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 
கொழும்பு
புதிய தேர்தல் முறையும் புத்தளம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும்
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் புதிய தேர்தல் முறை அமுல்படுத்தப்படும் போது தொகுதிகளின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட முனைப்புக்கள் தொடர்வதால் தமிழ் பேசும் மக்கள் பாதிக்கப்படாதவாறு அவை அமைக்கப்பட்டு, தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் என்று தாங்கள் குரல் கொடுத்து வருவதை இட்டு நன்றி தெரிவிக்கிறோம்.
அதற்கமைய புத்தளம் தேர்தல் தொகுதியிலும் கைவைக்கப்பட்டு, எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக நியாயமான அச்சங்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம்.
புத்தளம் தொகுதி…..
1. இரட்டை அங்கத்தவர் தொகுதி.
2. புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை, வண்ணாத்திவில்லு, கருவலகஸ்வெவ, நவகத்தேகம முதலான பிரதேச சபைகளை உள்ளடக்கி ஒரு தொகுதி.
3. கற்பிட்டி, ஆராட்சிக்கட்டுவ, பள்ளம பிரதேச சபைகளை உள்ளடக்கி ஒரு தொகுதி. 
என்று கருத்துக்கள் நிலவுவதுடன், முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக விருப்பு வாக்கு தேர்தல் முறையின் கீழ் எட்டாக் கனியாகிப் போயுள்ள புத்தளம் தொகுதி தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இவ்வாறான செயற்பாடுகளால் மீண்டும் கேள்விக் குறியாகிப் போய்விடுமோ என்ற நியாயமான அச்சம் மக்களின் மனங்களில் படர்ந்து போயுள்ளது. எனவே புத்தளம் தொடர்பிலும் விழிப்பாக தாங்கள் செயற்படுமாறு வினயமாக வேண்டுகிறோம்.
நன்றி
Mohamed Muhusi B.A(Hons), Dip in Edu, PGDTMH(UK), Dip in Journalism, Dip in Human Rights
12, 5th Lane New settlement Road 
Puttalam

Post a Comment

0 Comments