Subscribe Us

header ads

பீகொக் மாளிகை நுழைவாயிலுக்கு புதிய பூட்டு:அம்பலமான உண்மை! மஹிந்தவிற்கு பீகொக் மாளிகை கிடைக்காது !!


மஹிந்தவிற்கு பீகொக் மாளிகை கிடைக்காது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ராஜகிரியவில் அமைந்துள்ள பீகொக் மாளிகையில் குடியேற மாட்டார் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய வீட்டின் எதிரில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் தடாகம் கடல் மணலால் நிரப்பப்பட்டது.
வீட்டின் கூரைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
வீட்டிற்கு ஆசி வேண்டி பல்வேறு பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளன.
இன்று இந்த வீட்டில் குடியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார்.
வாய்ப்பேச்சு அளவில் வீட்டில் குடியமர்த்தாமல் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட வீட்டின் உரிமையாளர் ஏ.எஸ்.பி லியனகே முன்வைத்த யோசனைக்கு இதுவரையில் மஹிந்த உரிய பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஏ.எஸ்.பி லியனேகவிடம் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வீடு கிடைக்காவிட்டால் முன்னாள் ஜனாதிபதி நாரஹேன்பிட்டி அபயராமயவை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீகொக் மாளிகையில் குடியேறுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியோ, எ.எஸ்.பி லியனகேயோ எவ்வித கருத்துக்களையும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.


புலனாய்வு பிரிவுக்கு வருமாறு லியனகேக்கு அழைப்பு
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் இவ்விசாரணைகள் இடம்பெற்றன.
இதன்போது, பீகொக் மாளிகையை தான் எவருக்கும் விற்பனை செய்யவில்லையென்றும், இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தான் அதை மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்குவதற்கு உடன்பட்டிருந்ததாகவும் ஏ.எஸ்.பி.லியனகே வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதேநேரம்,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ராஜகிரியவில் அமைந்துள்ள பீகொக் மாளிகையில் குடியேற மாட்டார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


திடீரென காணாமல்போன பீகொக் மாளிகை உரிமையாளர்!
ஏ.எஸ்.பீ வணிக நிறுவனத்தின் உரிமையாளரான ஏ.எஸ்.பீ.லியனகேவை கடந்த சில நாட்களாக காணவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
அவர் சிங்கள செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஏ.எஸ்.பீ.லியனகே நாவல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது மாளிகையை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு இன்று உத்தியோக பூர்வமாக வழங்கவிருந்தார் எனவும் வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.
எனினும் லியனகே திடீர் என காணாமல் போயுள்ளதனால்,பீகொக் மாளிகையில் மகிந்த ராஜபக்சவினால் குடியேற முடியவில்லை.
இதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஏ.எஸ்.பீ.லியனகேவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.


பீகொக் மாளிகை நுழைவாயிலுக்கு புதிய பூட்டு:அம்பலமான உண்மை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு,வழங்கவிருப்பதாக கூறப்பட்ட நாவலயில் அமைந்துள்ள பீகொக் மாளிகை பெரும்பாலும் அவர் கைகளுக்கு கிடைக்காது என தெரியவருகின்றது.
தற்பொழுதே பீகொக் மாளிகையின் நுழைவாயிலுக்கும் புதிய பூட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் லியனகேவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினால் அவர் மனம் உடைந்து போயுள்ள காரணத்தினால்,இந்த மாளிகையை மகிந்தவிற்கு வழங்க விரும்பவில்லை என லியனகேவின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
பீகொக் மாளிகை விற்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையா? அந்த மாளிகையை பணத்திற்கு கொள்வனவு செய்தது யார்? பணத்திற்கு பெற்றுக்கொண்டவருக்கு பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது போன்ற பல கேள்விகள் லியனகேவிடம் கேட்கப்பட்டுள்ளது..
மகிந்த ராஜபக்ச பணம் செலுத்தி குறித்த மாளிகையை கொள்வனவு செய்ததாக அண்மை காலமான ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments