Subscribe Us

header ads

இவ்வருட ஹஜ் முகவர்களுக்கான நியமனத்தேர்வு


முஸ்லிம் சமைய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் அல்ஹாஜ் அப்துல் ஹலீம் அவர்களால் நியமிக்கப்பட்ட ஹஜ் கமிட்டி பலமுறை கூடி இவ்வருட ஹஜ் முகவர்களை தேர்வு செய்யும் ஒரு முறையை தீர்மானித்துள்ளது. இதன்படி நேர்முக நேர்காணல் மூலமும் மற்றும் தகுதிகளை வைத்து தெரிவு செய்யும் ஒரு முறையை இந்த குழு தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைய இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மே மாதம் நடுவில் இதற்கான நேர்காணல்கள்களை நடத்த தீர்மானிக்கப்படுள்ளது. மேலும் இந்த குழு சம்பந்தப்பட்ட முகவர் நிலைய காரியாலங்களுக்கும் விஜயம் செய்து தீர்மானங்கள் எடுப்பார்கள். அதன்படி கடந்த 12 ம் திகதி வெளியிடப்பட்ட தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையிலும் மற்றைய மொழி பத்திரிகைகளிலும் ஆர்வமுள்ளவர்களினதும் சம்பந்தப்பட்டவர்களினதும் விருப்பை கோரி (EXPRESSION OF INTEREST ) விண்ணப்பப்படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பப்படிவத்தை முஸ்லிம் சமைய கலாசார திணைக்களத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.  பூர்த்திசெய்த விண்ணப்பங்கள் இம்மாதம் 30ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தீர்மானித்திருந்தாலும் பல முகவர்கள் உம்ரா கடமையில் தற்போது ஈடுபட்டு இருப்பதால் மே மாதம் 8ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
   .
முன்னர் அமைச்சின் பதிவு செய்த ஹஜ் முகவர்களும் கட்டாயம் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

பாஹிம் ஹாஷிம்.
அமைச்சரின் அந்தரங்க செயலாளர்.

Post a Comment

0 Comments