Subscribe Us

header ads

இங்கிலாந்தின் வொர்சஸ்டர்யர் அணியில் சச்சித்ர


இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்க இங்கிலாந்தின் வொர்சஸ்டர்யர் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

இங்கிலாந்தின் வொர்சஸ்டர்யர் அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வீரர் சயீட் அஜ் மலின் இடைவெளியை நிரப்பவே குறுகியகால மாற்று வீரராக சச்சித்ர சேனாநாயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
அடுத்த வாரம் ஆரம்பமாகும் பாகிஸ்தான் அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் 37 வயதான அஜ் மல் இணைத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து அவரால் இங்கிலாந்து கழக போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 
30 வயதான சேனாநாயக்க இலங்கைக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Post a Comment

0 Comments