Subscribe Us

header ads

மஹிந்த தேர்தலை முற்படுத்த ஜெனீவா அச்சுறுத்தலே காரணம்-ஜனாதிபதி


கடந்த ஜனாதிபதித் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு முன் நடாத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த எடுத்த தீர்மானத்துக்கு சோதிடர்கள் காரணமல்ல. ஜெனீவா நெருக்கடியே உண்மையான காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த தினத்துக்கு இரு வருடங்கள் முன்பே ஜனாதிபதித் தேர்தலுக்கு சென்றதை சிலர் சோதிடர்களை காரணம் காட்டி சாக்குப் போக்கு கூறுகின்றனர். உண்மை அவ்வாறல்ல. மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பாரிய அச்சுறுத்தல் காணப்பட்டது.
இதிலிருந்து தப்புவதற்காக தேர்தல் ஒன்றை நடாத்தி தனக்கு நாட்டில் மக்களின் ஆதரவு இருக்கின்றது என உலகிற்கு காட்ட முற்பட்டார். இதற்காகவே, தேர்தலை முற்படுத்தினார் என பொலன்னறுவை பிரதேச சபை உறுப்பினர்களுடன் மேற்கொண்ட விசேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments