அஸ்கிரிய பீட மஹா நாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இறுதிக் கிரியைகள் நடைபெறும் இன்றைய நாளை தேசிய துக்க தினமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
சகல அரச மற்றும் தனியார் கட்டடங்களில் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், பெளத்த விகாரைகள். வீடுகளில் மஞ்சள் நிற கொடியை பறக்கவிடுமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது


0 Comments