Subscribe Us

header ads

தனியான கூட்டணி ஒன்றை அமைத்து போட்டியிடுவது குறித்து மஹிந்த கவனம்


தனியான கூட்டணி ஒன்றை அமைத்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தம்மை தெரிவு செய்யாவிட்டால், தனியான கூட்டணி ஒன்றை அமைத்து போட்டியிட முன்னாள் ஜனாதிபதி ஆயத்தமாகி வருகின்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு மாற்று அரசியல் சக்தியாக இந்த புதிய கூட்டணி இயங்க உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெரும் எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் இதற்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், மாற்று அரசியல் கட்சியொன்றின் ஊடாக மஹிந்த போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிக்க ஏற்கனவே சில அரசியல்வாதிகள் உறுதியளித்துள்ளனர்.

Post a Comment

0 Comments