Subscribe Us

header ads

சில முட்டாள்கள் மகிந்தரை மன்னராக்கும் வரை அவர் நல்லவராக விளங்கினார்


கடாபிக்கு என்ன நடந்தது எனபதை மகிந்த உணரவில்லை

சில முட்டாள்கள் அவரை மன்னராக்கும் வரை மகிந்த நல்லவராக விளங்கினார் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்தின தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

மகிந்த ராஜபக்ச இன்னமும் தான் ஏன் தோல்வியடைந்தார் என்பதை புரிந்துகொள்ளவில்லை.

மக்களுக்கு சுதந்திரமும் ஜனநாயகமும் தேவைப்பட்டதால் தான் அவர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.

பல உலக தலைவர்கள் சுதந்திரத்தை விட பொருள்சேர்ப்பதை முக்கியமாக கருதியதாலேயே தோல்வியடைந்தனர்.

கடாபிக்கு என்ன நடந்தது என்ற உண்மையை மகிந்த உணரவில்லை.
சில முட்டாள்கள் அவரை மன்னராக்கும் வரை மகிந்த 

நல்லவராகத்தான் காணப்பட்டார்,அவர்கள் அவரை மன்னர் என புகழ்ந்து பாடல்கள் கூட இயற்றினர்.இது அவரை முற்றாக மாற்றியது என ராஜித தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments