நாட்டு மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே
வாக்களித்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
குமாரதுங்கவுக்கு வாக்களிக்கவில்லை எனவும் தேசிய பிக்குகள் சம்மேளனம்
தெரிவித்துள்ளது.
அரசியல் பழிவாங்கலை உடனடியாக நிறுத்தி விட்டு,
நாட்டை ஐக்கியப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல தேவையான உதவிகளை வழங்குமாறு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடம் விசேட கோரிக்கையை
முன்வைப்பதாகவும் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய பிக்குகள் சம்மேளனத்தின் தலைவர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர்,
மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்தனர். சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு அல்ல.
சந்திரிகா நாட்டை பல வருடங்கள் ஆட்சி செய்த போதிலும் நாட்டில் நடைபெற்ற போரை அவரால் முடிவுக்கு கொண்டு வர முடியாது போனது.
பண்டாரநாயக்க குடும்பத்தை அழித்தது போல், நாட்டை அழிக்காது, மக்கள் விரும்பி ஆட்சி அதிகாரத்தை வழங்கிய நபர்கள் நாட்டை ஆட்சி செய்ய இடமளித்து விட்டு ஒதுங்கிருக்க வேண்டும்.
தேசிய பிக்குகள் சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, அவரிடம் பழிவாங்கும் எண்ணத்தை காணவில்லை.
எனினும் வெளியாட்களின் அழுத்தங்கள் காரணமாக அவர் சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை அந்த சந்திப்பில் தம்மால் உணர முடிந்ததாகவும் ஆனந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments