Subscribe Us

header ads

மைத்திரி அரசில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: மகிந்த


நடைமுறையில் உள்ள தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனமல்வில பிரதேச விகாரையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்த போது இவ்வாறு அச்சுறுத்தல்கள் காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கடந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கியே தனது அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments