திருகோணமலை கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் மீது இனம் தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 12.45 அளவில் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் வாயில் கதவு மற்றும் மதிலில் பொருத்தப்பட்டிருந்த மின் குமிழ்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடா்பில் காவற்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.



0 Comments