சீகிரிய சுவரில் எழுதிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் யுவதி உதயசிறி, ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியபோதும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லையென அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த உதயசிறி, கடந்த பெப்ரவரி மாதம் சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்குள்ள சுவற்றில் எழுதிய குற்றச்சாட்டிற்காக கைதுசெய்யப்பட்டு, இரண்டு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் உதயசிறிக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல அமைப்புக்கள், மற்றும் அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் இன மத பேதமில்லாது வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, ஜனாதிபதி கடந்த புதன் கிழமை இரவு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments