தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆக்ராவில்
அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சிவன் கோவிலாக
அறிவிக்க வேண்டும் எனக்கூறி வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் 6
வழக்கறிஞர்கள் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனு நேற்று
விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து மே மாதம் 5
ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, கலாசார அமைச்சகம்,
உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு
நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, அடுத்த கட்ட விசாரணையை மே 13 ஆம்
திகதிக்கு ஒத்திவைத்தார்.


0 Comments