Subscribe Us

header ads

ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் விற்க ஐ. நா. தடை


ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு ஆயுதங்கள் விற்கப்படுவதற்கு ஐ நா வின் பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது.
அதுமட்டுமல்லாது அந்தக் கிளர்ச்சி அமைப்புக்கு தலைவராக இருக்கும் சாலேஹ் அவர்களின் மகன் மீது பயணத்தடையும், அவரது சொத்துக்களை முடக்க வழி செய்யும் வகையிலான தீர்மானமும் ஐ நாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் அவர்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் விலகிச் செல்லவேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகர் சனாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசை அங்கிருந்து விரட்டியடித்துள்ள கிளர்ச்சியாளர்கள் இப்போது நாட்டின் தெற்கு பகுதியில் தங்களது கட்டுப்பாட்டை விரிவுபடுத்த சண்டையிட்டு வருகின்றனர்.
இதேவேளை சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் அரசு ஆதரவாக அந்தக் கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல்களையும் முன்னெடுத்து வருகிறார்கள். ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ஈரான் முன்வைத்துள்ள அமைதி உடன்படிக்கை திட்டம் ஒன்றையும் சவுதி அரேபியா நிராகரித்துவிட்டது.
இதனிடையே யெமனில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் மீது தாறுமாறாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்பது போர்க்குற்றங்களாகக் கருதப்படக்கூடும் என்றும் அனைத்துத் தரப்பினரும் சாதாரண பொதுமக்களை பாதுகாக்க தங்களால் ஆன அனைத்தையும் செய்யவேண்டும் என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ராத் அல் ஹுசேன் எச்சரித்துள்ளார்.
நன்றி: bbc 

Post a Comment

0 Comments