Subscribe Us

header ads

மஹிந்தவை பிரதமராக்கிக் காட்டுவேன்!- விமல் வீரவன்ச சவால்!

 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பொதுத்தேர்தலில் போட்டியிட வைத்து பிரதமராக்கிக் காட்டப் போவதாக விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார்.
போலியான வாக்குறுதிகளை வழங்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களை தம்வசப்படுத்திக் கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்தக் குற்றச்சாட்டை வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற செவ்வியின் போது சுமத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச, பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தமையையும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இல்லையேல்,  மஹிந்த ராஜபக்சவை மற்றும் ஒரு கட்சியில் போட்டியிட வைத்து பிரதமராக்கிக் காட்டப் போவதாக விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments