Subscribe Us

header ads

பசில் ராஜபக்சவை டுபாயில் கைது செய்ய திட்டமிடும்: பாதுகாப்பு தரப்பு


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை டுபாயில் வைத்து கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 20ம் திகதி அமெரிக்காவில் இருந்து இலங்கை வரவுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து அவர் வரும் விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் போது அவரை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ச இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் போது விமான நிலையத்தில் அவருக்கு உதவ ராஜபக்ச ஆதரவு அதிகாரிகள் இன்னும் விமான நிலையத்தில் பணியாற்றி வருவதால், பாதுகாப்பு தரப்பினரின் கைது செய்யும் முயற்சி தோல்வியடையலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே தந்திரோபாய நடவடிக்கையாக பசில் ராஜபக்சவை டுபாய் விமான நிலையத்தில் கைது செய்ய பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதேவேளை பசில் ராஜபக்ச மிகவும் ரகசியமான முறையில் நாட்டுக்குள் வந்து நீதிமன்றத்தில் ஆஜராக திட்டமிட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் ஊடாக வாதங்களை முன்வைத்து விட்டு அவர் அமெரிக்கா புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

Post a Comment

0 Comments