Subscribe Us

header ads

பாத்ரூம் முதல் படுக்கையறை வரை... பெண்களைத் துரத்தும் மூன்றாவது கண்! கேமராவிடம் இருந்து பெண்கள் தப்பிப்பது எப்படி?



கோவாவில் உள்ள 'பேப் இந்தியா’ ஜவுளி கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டுபிடித்தார். இதுதொடர்பாக போலீசார் கடை மேலாளர் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி  தனது கணவர் சுபின் இரானியுடன் கோவாவுக்கு சென்றுள்ளார். நேற்று காலை அவர் கண்டோலிம் என்ற இடத்தில் உள்ள ‘பேப் இந்தியா’ என்ற ஜவுளி கடைக்கு உடைகள் வாங்க சென்ற போது சில உடைகளை வாங்கிய அவர் அங்குள்ள உடை மாற்றும் அறைக்கு சென்றார். அப்போது அவர் அந்த அறையில் ஒரு சிறிய ஓட்டையும், அதற்குள் ரகசிய கேமரா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் அந்த அறையை ஆய்வு செய்து அங்கிருந்த ரகசிய கேமராவையும், அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைத்துள்ள ஒரு ‘ஹார்டு டிஸ்க்’கையும் கைப்பற்றினார்கள். அந்த கடையின் ஊழியர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த கேமரா 4 மாதங்களுக்கு முன் பொருத்தியது தெரியவந்தது. அங்கு பதிவாகும் காட்சிகள் மேலாளர் அறையில் உள்ள கம்ப்யூட்டரில் ஒளிபரப்பாவதும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து நாடெங்கிலும் இதுபோன்ற கேமரா குற்றங்கள் நடந்து வரும் நிலையில், ஹைடன் கேமராவிடம் இருந்து பெண்கள் தப்பிப்பது எப்படி?

மொபைல் ஜாமர்

குறைந்தபட்சம் 5,000 ரூபாய் விலையில் இது கிடைக்கிறது. வாக்கி டாக்கி சைஸில் இருக்கும் இதை வாங்கி வீட்டில் வைத்துவிட்டால், முப்பதடி சுற்றளவில் இருக்கும் செல்போன், அதிலிருக்கும் கேமரா ஆகியவற்றை செயல்படவிடாது. உங்கள் செல்போனும்தான்.

ஸ்பை கேமரா ஃபைண்டர்

குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து கிடைக்கும் இதுவும், வாக்கி டாக்கி போலத்தான் இருக்கும். இதைக் கையில் வைத்துக் கொண்டு நீங்கள் செல்லும்போது, இந்தக் கருவியில் சிவப்பு லைட் எரிந்தால், அங்கே 'ஸ்பை கேமரா' வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அந்தக் கேமராவை செயல்படவிடாமல் இக்கருவி தடுக்காது. விஷயம் தெரிந்த ஆட்களை அழைத்து, கேமராவை அகற்றிவிடலாம்.

ஸ்பை கேமரா ஜாமர்

குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் இக்கருவியை உங்கள் வீட்டில் பொருத்திவிட்டால், அங்கே எந்த வகையான 'ஸ்பை கேமரா' பொருத்தப்பட்டிருந்தாலும், அது செயல்படாது.

Post a Comment

0 Comments