அபு அலா -
அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் 2013 / 2014 ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (08) இடம்பெற்றது.
பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஐ.எம்.அப்துல் சலாம் தலைமையில் பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் கலந்துகொண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எ.எல்.எம்.காசிம், எம்.ஐ.எம்.நவாஸ், ஏ.சீ.எம்.சுபைர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் விஷேட அதிதிகளாக கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சீ.கஸ்ஸாலி, எம்.ஏ.அபுதா ஹிர், மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.முனாப் ஆகியோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக இன்றைய பிரதம அதிதியில் ஒருவரான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரினால் சித்தியடைந்த மாணவர்களுக்கு தலா 1000 ரூபா வீதம் 28 மாணவர்களுக்கும் அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக்கிளையில் சிறுவர் சேமிப்பு கணக்கினை திறந்து வைத்து அதன் புத்தகத்தையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கற்பித்துக்கொடுத்த ஆசிரியர்களுக்கு பெற்றோர்களினாலும், மாணவர்களினாலும் பரிசில் பொருட்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப் பிடத்தக்கது.
0 Comments