Subscribe Us

header ads

ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்களுக்கு முன்னரே நடத்தியது மிகப்பெரும் தவறு!சகல ஜோதிடர்களிலும் தற்போது நம்பிக்கையை இழந்துவிட்டேன்!! - மகிந்த


இலங்கை அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏஎப்.பி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் ஆதாரங்கள் இல்லை, அவர்கள் கண்மூடித்தனமான ஆதாரங்களை குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர், இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை

நானோ அல்லது எனது குடும்பத்தை சேர்ந்தவர்களோ பிழையான வழியில் பணம் சேர்க்கவில்லை.

முதலில் அவர்கள் என்னிடம் சுவிஸ்வங்கிக்கணக்குகள் உள்ளதாக தெரிவித்தனர்,பின்னர் துபாயில் இருப்பதாக தெரிவித்தனர்,அந்த பணத்தை காண்பியுங்கள் ஆதாரங்கள் எங்கே?

துபாயில் எனக்கு ஹோட்டலொன்று இருப்பதாக தெரிவித்தனர்,அதன் பின்னர் இலங்கையில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் என்னுடையது எனது சகோதரர்களுடையது என குறிப்பிட்டனர்.

நான் ஒருபோதும் சீனாவிற்கு சார்பாக செயற்பட்டதில்லை, இலங்கையின் நலன்களை மனதில் வைத்தே செயற்பட்டேன்,அனைத்து பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் முதலில் இந்தியாவிற்கே வழங்கினேன்  ஆனால் அவர்கள் அதனை ஏற்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்களுக்கு முன்னரே நடத்தியது மிகப்பெரும் தவறு, இதற்காக நான் தற்போது வருத்தமடைகிறேன், குறிப்பிட்ட திகதியில் தேர்தல் நடத்தினால் எனக்கு வெற்றி நிச்சயம் என ஜோதிடர் தெரிவித்தார்.

நான் சகல ஜோதிடர்களிலும் தற்போது நம்பிக்கையை இழந்துவிட்டேன்.

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை, ஓய்வெடுக்கின்றேன், புதிய  அரசாங்கத்தின் கீழ் அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகின்றது. ஸ்திரதன்மையை உறுதிசெய்வதற்காக விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments