Subscribe Us

header ads

பில் கொடுக்கும் தகராறில் பெண்ணை அறைந்த காஷியர்


பெங்களூர் கம்மன்ஹாலி பகுதியில் உளளது சுக் சாகர் ஓட்டல். இந்த ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பில் கொடுக்கும் தகராறில் கேஷியர் பெண்ணின் கன்னத்தில் அறைந்தார்.

பெங்களூரை சேர்ந்த ஷரோன் நைஜல் என்ற பெண் தனது தயாருடன் சுக் சகர் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். ரூ. 245 க்கு சாப்பிட்டு உள்ளனர் சாப்பிட்டு விட்டு பில் கட்ட சென்றார். கவுண்டரில் குண்டபுரா பகுதியை சேர்ந்த வினோத் (வயது 25) என்ற வாலிபர் கேஷியராக இருந்தார். நைஜல் ” தன்னிடம் டெபிட் கார்ட்டு இருப்பதாகவும் அது இங்கு பயன்படுத்த அனுமதி உண்டா என கேட்டு உள்ளார்.” அதற்கு வினோத் டெபிட் கார்ட்டுக்கு 4 சதவீதம் பணம் அதிகம் கட்ட வேண்டும் என கூறி உள்ளார்.”

இதற்கு நைஜலும் சம்மதித்து உள்ளார். இதை தொடர்ந்து வினோத் கார்டை தேய்த்து உள்ளார். ஆனால் பில் ரூ ரூ.315 வந்து உள்ளது.சாப்பிட்ட தொகைக்கு அதிகமாக ரூ 70 பிடிக்கப்பட்டு இருந்தது. இதற்கு நைஜல் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் 4 சதவீதம் தனே பிடிப்பதாக கூறினீர்கள் ஆனால் ரூ 70 பிடிக்கபட்டு உள்ளதே என கேட்டு உள்ளார். இதற்கு வினோத் கோபமாக பேசி உள்ளார்.மேலும் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி உள்ளார். பின்னர் நைஜலின தாயாரை பிடித்து தள்ளி உள்ளார். இது குறித்து கேட்ட போது கவுண்டரில் இருந்து எழுந்து வந்து நைஜலின் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார். இதில் நிலை தடுமாறிய நைஜல் கீழே விழுந்து விட்டார். உடனடியாக அருகில் நின்றவர்கள் அவருக்கு உதவி செய்தனர்.


இது இகுறித்து பனஸ்வாடி போலீஸ் நிலையத்தில் நைஜல் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் வினோத்தை கைது செய்தனர். நைஜல் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நைஜலுக்கு கன்னத்தில் சதை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர் கூறி உள்ளார்.

Post a Comment

0 Comments