அபு அலா –
ஜனநாயகமிக்கதுவும், அமைதியானதுவுமான ஒரு தேசத்தில் வாழ்கின்ற நாம்
அனைவரும் மனித நேயமிக்கதுவும், ஐக்கியமிக்கதுவுமான வாழ்க்கை முறையை
கட்டியெழுப்புவதன் மூலமாகவே எமது நாட்டில் நிரந்தர அபிவிருத்தி மற்றும் வாழ்வு
மேம்பாட்டினைக் காணமுடியும்
என சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் அன்வர் நௌஷாத் தனது புத்தாண்டு வாழ்த்துச்
செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மனித நேய செயற்பாடுகளில் பெரிதும் ஆர்வம் கொண்டு,
சிவில் அமைப்புக்களை ஒன்றிணைத்து எமது மக்களின் வாழ்வில் இடம் பெற்ற
சிக்கலானதுவும், முரண்பாடுமிக்கதுவுமான சந்தர்ப்பங்களை உண்மைத் தன்மைகளை ஆதரமாக
கொண்டு எமது அமைப்பு முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றது, அதேவேளை மதம்,
இனங்களுக்கு அப்பால் எமது உறுப்பினர்கள் செயற்படும் விதம், அர்ப்பணிப்பு என்பன
எமது நாட்டின் இன்றைய தேவைகளுக்கான முன்னுதாரணங்களாக கொள்ளக்கூடியன.


0 Comments