Subscribe Us

header ads

அட்டாளைச்சேனை மு.காவின் மத்திய குழுக்கூட்டம்

அபு அலா -


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நேற்றிரவு சனிக்கிழமை (11) அட்டாளைச்சேனை கடற்கரை ஹோட்டலில் இடம்பெற்றது.

இக்கூட்டத்துக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ், மு.காவின் ஸ்தாபக செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியும் மத்திய குழுவின் ஆலோசகருமான எஸ்.எம்.ஏ.கபூர், சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.முஹம்மட் வாஹிட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.எல்.எம்.நஸீர் மத்திய குழுவின் அங்கத்துவத்தையும் அதில் இடம்பெறுகின்றவர்களின் செயற்பாடுகள் பற்றி மிகத் தெளிவான விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர்.

அதனைத் தொடர்ந்து குழுவில் இடம்பெறுகின்றவர்களினால்மத்திய குழுவின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் அதன் முன்னெடுப்புக்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.



Post a Comment

0 Comments