Subscribe Us

header ads

மகிந்த ஜனரஞ்சகமான தலைவர்: தினேஷ் புகழாரம்


தான் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டால், அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் எதிரணிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மீண்டும் எதிர்க்கட்சிக்கு திரும்பாதவர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருக்க முடியும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் பதவிகளை பெறாது, அரசாங்கத்தின் தலைவர்களின் அணுகுமுறைக்கு ஏற்ப தீர்மானங்களை எடுக்காதவர்கள் மாத்திரமே எதிர்க்கட்சியில் இருக்க வேண்டும்.

உண்மையை விளங்கி கொள்ளாத, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பை ஏற்படுத்த பலகாலமாக எதிர்ப்பார்த்திருந்தவர்கள், ஆளும் தரப்புக்கு சென்று அமைச்சு பதவிகளை பெற்றுள்ளனர் எனவும் குணவர்தன கூறியுள்ளார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தினேஷ் குணவர்தன,
முன்னாள் ஜனாதிபதி நாட்டில் இருக்கும் ஜனரஞ்சகமான அரசியல் தலைவர் எனவும்,

முன்னோக்கி பயணிக்கும் மக்களுடன் நாட்டை வெற்றியடைய செய்யும் வழியை வலுப்படுத்துவதே தமது நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments