Subscribe Us

header ads

பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் இந்திய மாணவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட மோடி - வீடியோ இணைப்பு


பிரதமர் நரேந்திர மோடி, 3 நாடுகளுக்கு 9 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக, பிரான்ஸ் நாட்டில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். கடந்த 9-ம் தேதி இரவு பிரான்சுக்கு போய்ச் சேர்ந்த மோடிக்கு நேற்று முன்தினம் எலிசி அரண்மனையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரெஞ்சு வீரர்களின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், பிரான்ஸ் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, டவ்லவுசில் உள்ள பிரெஞ்சு விண்வெளி நிறுவனத்தை அவர் பார்வையிட்டார். அப்போது தேசிய விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இந்திய மாணவர்கள் "மோடி"..."மோடி" என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தபடி பிரதமர் நரேந்திர மோடியை சூழ்ந்து கொண்டனர்.

மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களுடன் புன்னகைத்தபடி மோடி செல்பி எடுத்துக் கொண்டார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் “தேசிய விண்வெளி ஆய்வு  மையத்தில் உள்ள இளைய நண்பர்களுடன் செல்பிக்களை எடுத்துக் கொண்டேன். நாங்கள் அட்டகாசமான செல்பியை எடுக்க முயற்சித்தோம்” என்று ட்வீட் செய்தார்.

Post a Comment

0 Comments