அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில் வேலை
பார்த்து வருபவர் டிம் பிர்ஸ், இவர் டெக்சாசுக்கு அருகே பல மில்லியன்
வருடங்களுக்கு முன்பாக நீர்நிலைகளால் மூழ்கியிருந்த, கட்டுமான இடத்தை
விலைக்கு வாங்கி அதில் புதைபடிமங்களைக் கண்டறியும் அகழ்வாராய்ச்சியை
மேற்கொண்டு வருகிறார். டிம்முடன் சேர்ந்து அவரது 5 வயது மகன் வெய்லியும்
தொல் பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடுவது வழக்கம்
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் வெய்லி தனது அகழ்வாராய்ச்சியின் போது ஒரு பழங்கால புதை படிமம் ஒன்றைக் கண்டுபிடித்து அதை ஆர்வமாக தனது தந்தையிடம் கொண்டு சென்று காண்பித்தான். அவர் அது ஆமை என்று தெரிவித்தார். இது சிறுவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும் டிம்முக்கு அது என்ன உயிரினம் என்பதில் சந்தேகம் இருந்தது.
இதையடுத்து கடந்த வாரம் சதர்ன் மெதடிஸ்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அவர்களது புதை படிமத்தை எடுத்து சோதனை செய்து பார்த்தனர். முதற்கட்ட சோதனையில் அது 100 மில்லியன் வருடங்கள் பழமையான தாவர உணவு உண்ணி வகையைச் சேர்ந்த நிலத்தில் வாழும் டைனோசராக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதை உறுதி செய்வதற்காக சோதனை மையத்துக்கு அந்த எலும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
"என்னுடைய அப்பா முதலில் இது ஒரு ஆமை என்றார், ஆனால் இப்போது அவரே என்னிடம் அது ஒரு டைனோசர் தான் என்று கூறுகிறார்" என்று சொல்லி அப்பாவைக் கிண்டல் செய்து சிரிக்கிறான் குட்டிச்சிறுவன் வெய்லி.

0 Comments