ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவில் இருந்து
04 உறுப்பினர்கள் நீக்கப்பட்டமையினால் கட்சி பிளவு பட ஆரம்பித்துள்ளது என
மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரச்சன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த உறுப்பினர்களின் நீக்கம் தொடர்பில்
கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் என சிங்கள
ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுதந்திர
கட்சியின் பிரதம வேட்பாளராக களமிறங்க வேண்டுமென போராடிய 04 உறுப்பினர்களை
மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கிவிட்டார்கள் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை தம்மால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்,
இதனை தாம் வன்மையாக கணடிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments