Subscribe Us

header ads

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஸ்ரீ.சு.க இன்று முடிவு


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் நியமிக்கப்பட்ட குழு தேர்தல் முறையில் மாற்றம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக இன்று ஒன்று கூடுகிறது.
இந்த கூட்டத்தில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை குறித்தும் ஆராயப்படவுள்ளது.
பாராளுமன்றத்தில் தற்போது 225ஆகவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 250ஆக அதிகரிப்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானம் நாளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், ஜனாதிபதியே இறுதி தீர்மானத்தை எடுப்பார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த, எதிர்கட்சியின் பிரதம கொறடா ஜோன் செனவிரட்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, மற்றும் மகிந்த சமரசிங்க ஆகியோர் இக்குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
இதேவேளை தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டுவருவது தொடர்பில் தேர்தல் ஆணையாளரின் பரிந்துரையும், ஆளும் மற்றும் எதிர்கட்சிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments