Subscribe Us

header ads

கற்பிட்டி துரையடி பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம் --- Updated


மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம். கற்பிட்டி துரையடி பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி, மற்றொருவர் காயமாகியுள்ளார்.

Updated  News 
கற்பிட்டி, துறையடி பிரதேச கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த படகில் வந்த மற்றும் ஒரு இளைஞர் காயமடைந்து கற்பிட்டி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 09.30 மணியளவில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கற்பிட்டியினை சேர்ந்த 34 வயதுடைய குமார் தல்மேதா எனும் குடும்பஸ்தரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார் காயமடைந்தவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடையவராவார்..
உயிரிழந்தவரின் சடலம் கற்பிட்டி தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
 

Post a Comment

0 Comments