Subscribe Us

header ads

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம் இன்று!


 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியும், கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
19ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 19ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின் அடிப்படையிலேயே நாளை 19ஆம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவது தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments