கடந்த ஜனாதிபதி தேர்தலில் போது தன்னால் இழைக்கப்பட்ட சில தவறுகளினாலேயே தான் தேர்தலில் தோல்வியடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு மக்களின் விருப்பத்தில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சி நாட்டில் நடைபெறவில்லை எனவும் நிறைவேற்று சபை ஊடாகவே செயற்படுத்தப்படும் ஆட்சியே நாட்டில் நடைபெறுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
0 Comments