முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆவிக்கு பயந்து 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதை தடுக்கும் கூட்டுச்சதி வேலையை செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்துவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சம்பிக்க ரணவக்க, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரின் குரலுக்கு பின்னால் மைத்திரிபால சிறிசேன இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ள அனுரகுமார, அப்படியில்லை என்றால், மைத்திரிபால சிறிசேனவே அதனை நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அத்துடன் 9வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தனது நிலைப்பாடு என்ன என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஜே.வி.பி என்பது நடந்து கொண்டிருப்பது என்னவென்பதை புரிந்து கொள்ள முடியாத குழந்தை அல்ல.
கதவின் சத்தம் எது, மேளத்தின் சத்தம் எது என்பது ஜே.வி.பிக்கு தெரியும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
0 Comments