Subscribe Us

header ads

சந்திரிக்கா ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கு யார் அதிகாரம் வழங்கியது: ஞானசார தேரர் கேள்வி


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு மேடைகளில் ஏறி கமரா முன் நின்று பேசுவதற்கான அதிகாரத்தை அவருக்கு  யாரும் வழங்கவில்லை என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டிற்கு எத்தனை தலைவர்கள் இருக்கின்றார்கள்? சம்பிக்க, சந்திரிகா என நாட்டிற்குள் பல தலைவர்கள் இருக்கின்றார்கள்.

சந்திரிகா ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கான அதிகாரத்தை யார் அவருக்கு வழங்கியது என்று அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Post a Comment

0 Comments